ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யால தேசிய பூங்காவிற்கு நேற்று (19) ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
அதன்போது யால பூங்காவின் உள்நுழைவு பற்றுச்சீட்டுகளை நிகழ்நிலை மூலம் கொள்வனவு செய்யக்கூடிய வழிமுறையை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பூங்காவில் வறண்டு கிடக்கும் குழிகளுக்கு நீர் நிரப்பும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.