Our Feeds


Monday, October 16, 2023

ShortNews

போர் நிறுத்தம் இல்லை – அறிவித்தது இஸ்ரேல்



இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் திடீரென தாக்குதல் நடத்திய நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.


காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் இராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே, காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லவும், காசாவிலிருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையிலும் காசா- எகிப்து எல்லையில் ராஃபா க்ரோசிங் இன்று திறக்கப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


ராஃபா க்ரோசிங் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் தெற்கு காசாவில் தற்காலிமாக தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், ஹமாசுக்கு எதிரான மோதலில் இதுவரை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர் காசாவை விட்டு வெளியேறுவதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »