Our Feeds


Tuesday, October 17, 2023

ShortNews

தனது பிள்ளையைப் பயன்படுத்தி தாய் செய்துவந்த மோசமான செயல்!



தனது பிள்ளையைப் பயன்படுத்தி பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடும் மோசடியில் ஈடுபட்ட தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்களின் தொலைபேசி மற்றும் பணம் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொது இடங்களில் தமது பிள்ளையை பயன்படுத்தி நீண்டகாலம் திருட்டில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »