Our Feeds


Wednesday, October 18, 2023

ShortNews

சாராயக் கடை வேண்டாம் | நோர்வூட் ஒட்டரி பிரிவில் மக்கள், மத குருமார்கள் சேர்ந்து எதிர்ப்பு.



மஸ்கெலியா விசேட நிருபர்.


இன்று காலை 10 மணிக்கு நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான டிக்கோயா சலங்கந்தை ஒட்டரி  பிரிவில் புதிதாக அமைய இருக்கும் மதுபான சாலை வேண்டாம் என கோரிக்கை முன் வைத்து அப் பகுதியில் உள்ள மத குரு மார்கள், இளைஞர்கள், கிராம மக்கள் ஒன்றினைந்து பாரிய அளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர்.


இந்த ஆர்ப்பாட்டம் அப் பகுதியில் உள்ள மத குருமார்கள் ஏற்பாடு செய்து சலங்கந்தை ஒட்டரி பகுதியில் இருந்து ஊர் வலமாக டிக்கோயா நகரை வந்து அடைந்து உள்ளது.


இந்த ஆர்ப்பாட்ட காரர்கள் நுவரெலியா மாவட்டத்தில் இனியும் மது பானம் சாலைகள் வேண்டாம் எனவும், தற்போது உள்ள அனைத்து மது பான சாலைகளையும் அகற்ற வேண்டும் மது அற்ற மலையகம் என உறுவாக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »