Our Feeds


Saturday, December 30, 2023

SHAHNI RAMEES

இஷாக் ரஹ்மான் MP யின் சொந்த ஊரில் சஜித் கலந்து கொண்ட நிகழ்வுக்கு இஷாக் ரஹ்மானுக்கு அழைப்பில்லை - நடந்தது என்ன?

 


இஷாக் ரஹ்மான் MP யின் சொந்த ஊரில் சஜித் கலந்து

கொண்ட நிகழ்வுக்கு இஷாக் ரஹ்மானுக்கு அழைப்பில்லை - நடந்தது என்ன?


கலாவெவ மத்திய கல்லூரியில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்ட நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அழைக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


அனுராதபுரம் மாவட்டம், கலாவெவயில் நேற்று (29) எதிர்க்கட்சித் தலைவர்கள் சஜித் கலந்து கொண்ட பாடசாலைகளுக்கான ஸ்மாட் போட் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் கலாவெவயை சேர்ந்தவரும் SJB-ACMC பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச அவர்கள் 20ம் திருத்தத்திற்கு கைதூக்கி ஜனாஸா எரிப்பு நேரத்தில் 20க்கு கைதூக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக சாடிப் பேசியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.


பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கோட்டாவுக்கு அதிக அதிகாரங்களை பெற்றுக் கொடுத்த 20ம் திருத்தத்திற்கு கையுயர்தியவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »