இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 9.300 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, ஹெரோயின், ஐஸ், கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 264 கிலோகிராம் ஐஸ்ரக போதைப்பொருள் நேற்று காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறித்த போதைப்பொருளின் பெறுமதி 3,798 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
