Our Feeds


Sunday, July 28, 2024

SHAHNI RAMEES

நாட்டில் 10 மாதங்களில் 500 கொலைச் சம்பவங்கள் பதிவு...!


 கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில்  500 கொலைச்

சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   


இதன்படி, கடந்த ஆண்டில் 488 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 52 துப்பாக்கிச் சூடு காரணமாக நடந்தவை ஆகும்.  


தங்காலை, நுகேகொடை,  கம்பஹா,  இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் அதிகளவான கொலைகள் பதிவாகியுள்ளன. தங்காலை பிரதேசத்தில் மாத்திரம் 32 கொலைகள் பதிவாகியுள்ளன. 


நாடு  முழுவதும் 2018 ஆண்டு மற்றும் 2022 ஆண்டிக்கு இடையில் 7,017 படுகொலைகள்  பதிவாகியுள்ளன.  


இவ்வாறான வன்முறைக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  


இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின்  எண்ணிக்கை 27 வீதத்தால் அதிகரித்துள்ளன. 


ஏனைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எவ்வாறாயினும்,  குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என இலங்கை பொலிஸ் பிரிவின் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »