Our Feeds


Friday, July 19, 2024

SHAHNI RAMEES

முதூரில் பஸ் கவிழ்ந்து விபத்து – 30 பேர் மருத்துவமனையில்....

 


மூதூர் – கங்கை பாலம் அருகே தனியார் பேருந்து

கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.


காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »