Our Feeds


Sunday, July 14, 2024

Admin

வகுப்புக்கு வந்த சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக 38 வயது நடன ஆசிரியர் ஹங்வெல்ல பொலிசாரினால் கைது.



நடன வகுப்பிற்கு வந்த சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நடன வகுப்பு ஆசிரியர் ஒருவர் சனிக்கிழமை (13) கைது செய்யப்பட்டதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.


ஹன்வெல்ல படேவெல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நடன ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர், தனது நடன வகுப்பிற்கு வந்த சிறுமிகளை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர் தொடர்பில் தலங்கம மற்றும் நவகமுவ பொலிஸாருக்கும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹன்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »