இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தேசிய அணியின் ‘துடுப்பாட்ட பயிற்சியாளராக’ முன்னாள் இங்கிலாந்து பெட்ஸ்மேன் இயன் பெல்லை நியமித்துள்ளது.
ஒகஸ்ட் 16-ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவதககவும், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு வரை இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயன் பெல் இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42.69 சராசரியில் 7727 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் 22 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில் "அங்குள்ள நிலைமைகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளுடன் வீரர்களுக்கு உதவ உள்ளூர் அறிவு கொண்ட ஒரு நபரை அழைத்து வர இயானை நியமித்தோம். இயன் இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் அதிகம், மேலும் அவரது உள்ளீடுகள் இந்த முக்கியமான சுற்றுப்பயணத்தில் எங்கள் அணிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, August 13, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இயன் பெல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »