எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.குருநாகல் மாவட்ட எம்பியான அசங்க நவரத்ன தனது கட்சி சஜித் பிரேமதாசவுடன் இணையப்போவதாக தெரிவித்த நிலையில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.