Our Feeds


Thursday, August 15, 2024

Sri Lanka

தேர்தல் ஆணைக்குழு “கோப்பிகடை”போல காணப்படுகின்றது - விஜயதாச!


வேட்பு மனுதாக்கல் செய்யும் நடவடிக்கைகளின் போது  தேர்தல் ஆணைக்குழு ஒழுக்கம் கட்டுப்பாட்டை  பேண தவறிவிட்டதாக தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றம் போல காணப்படும் ஒழுக்கம்  அமைதி பேணப்படும் என தெரிவித்துள்ள அவர் இம்முறை அது 'கோப்பிகடை" போல காணப்படுகின்றது பல குழுக்கள் உருவாகியுள்ளன என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல்பிஜையாக விரும்புபவர்களின் நடத்தைகள் கவலையளிக்கும் விதத்தில் காணப்படுகின்றன,எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஒரு வேட்பாளரை வெற்றிபெறச்செய்வதற்காக  பல 'டம்மி" வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்,ஒரு வேட்பாளருக்காக 15 முதல் 20 வரையிலான 'டம்மி" வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்,அவர்கள் காடையர்கள் போல நடந்துகொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேணுவதற்கு தேர்தல் ஆணைக்குழு முயலவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள விஜயதாச ராஜபக்ச மக்கள் ஒழுக்கமான விதத்தில் நடந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னர் நாங்கள் அவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »