நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 60% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்து நுவரெலியாவில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பான முதலாவது பொதுக்கூட்டம் நுவரெலியா பொது வாசிகசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இக் கூட்டத்தில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்த அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலம் முதல் அவருடன் நட்பு பேணி வந்துள்ளதாகவும் சதாசிவம் தெரிவித்தார்.
அதேநேரத்தில் பெருந்தோட்டங்களை 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 22 கம்பனி காரர்களுக்கு குத்தகைக்கு விடும் பொழுது இவர் நாட்டின் பிரதமராக இருந்து செயற்பட்டார் என்பதை குறிப்பிட்ட அவர்,
மலையக தோட்டப்பகுதி கல்விக்காகவும் தொழிலாளர்களின் உரிமை சார் நலத்திட்டங்களிலும் இவரின் பங்கு கடந்த காலங்களில் சிறப்பு பெற்றிருந்தது எனவும் அவருடன் இணைந்து தோட்ட பகுதி கல்வி அபிவிருத்திக்கு நானும் பங்காற்றி வந்திருந்தேன் எனவும் சுட்டிக்காட்டினார்.
எனவே தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் அக்கறை கொண்ட தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் விளங்குகின்றார். அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு நமது நாடு பொருளாதார பின்னடைவை கண்டு நாட்டு மக்கள் வாழ்வு கேள்வி குறியான நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில்
இவ்வாறாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட துரதிஷ்ட்டவசமான காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் நாட்டை மீள கட்டியமைக்க முன்வாருங்கள் என அழைப்பு விடுக்கையில் ஓட்டமாக ஓடி ஒடியவர்கள் மத்தியில் தனி மனிதனாக நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முன்வந்து பாடுப்பட்ட துணிச்சல் மிக்க தலைவரான இவர் மீது எமது பார்வை திரும்பியுள்ளது.
இந்நிலையில், இவரை மறுபடியும் ஜனாதிபதியாக்கி நாட்டில் ஒரு நிலையான பொருளாதாரத்தை கொண்டுவர அவரை வெற்றிபெற செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கும் உள்ளது என்பதை தெரிவிக்கும் முகமாக தனது முன்னணியின் முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Wednesday, August 28, 2024
நுவரெலியாவில் ரணில் வெற்றி பெறுவது உறுதி - சதாசிவம் நம்பிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »