Our Feeds


Thursday, September 19, 2024

Sri Lanka

ஜனாதிபதி தேர்தல் 2024 - அமைதி காலத்தில் செய்யக்கூடாதவை!


2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

அதன்படி நேற்று (18) நள்ளிரவு 12.00 மணி முதல் தேர்தல் நடைபெறும் 21 சனிக்கிழமை வரையிலான காலப்பகுதி “அமைதி காலமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட நாளிலிருந்து, வேட்பாளர்கள் தங்கள் முக்கிய பேரணிகள் உள்ளிட்ட பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

பிரதான வேட்பாளர்களின் இறுதிப் பிரச்சார கூட்டங்கள் நேற்று பிற்பகல் கொழும்பு மற்றும் பல புறநகர் பகுதிகளில் நடைபெற்றன.

இதேவேளை, நேற்று நள்ளிரவு தொடக்கம் தேர்தல் நடைபெறும் 21 ஆம் திகதி சனிக்கிழமை வரையான அமைதி காலப்பகுதியில் எந்தவிதமான பிரச்சார நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் 21 ஆம் திகதி போன்று 22 ஆம் திகதியும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம்  எம்.ஜி. குணசிறி தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டெம்பர் 20ஆம் திகதி மூடப்படும் எனவும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தேவைக்கேற்ப பாடசாலை நேரத்தின் பின்னர் செப்டம்பர் 19 ஆம் திகதி உரிய கிராம அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »