வாக்கெடுப்புக்கு நிலையங்களுக்கு தொலைபேசி எடுத்து வருதல், புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல், ஆயுதங்களை எடுத்து வருதல், மது அருந்திவிட்டு வருதல் போன்ற விடயங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்ததார்.
வாக்கு சீட்டுகளை புகைப்படம் எடுத்தலும், அவற்றை காட்சிப்படுத்துதலும், தாம் வாக்களித்த வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை கூட்டாக அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Thursday, September 19, 2024
தேர்தல் தினத்தில் முக்கிய கட்டுப்பாடுகள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »