எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 51 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 87 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஏனைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தபால் ஊழியர்களின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 14ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இருந்தால், தமக்கு கடிதங்களை விநியோகிக்கும் அலுவலகத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.