Our Feeds


Tuesday, September 10, 2024

Admin

தேர்தல் நடவடிக்கை – நாளை முதல் இரு பாடசாலைகளுக்கு விடுமுறை!



தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன்படி நாளை (11) முதல் திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமாக விபுலானந்த மகா வித்தியாலயம் பயன்படுத்தப்படவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்தப்படும் இந்து வித்தியாலயம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மூடப்படும் என மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் ஏனைய பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »