Our Feeds


Tuesday, September 24, 2024

Zameera

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விஜித ஹேரத்திற்கு உத்தரவு


 கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​அந்த வழக்கின் வாதியான விஜித ஹேரத் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

அதன்போது, ​​விஜித ஹேரத் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, தனது கட்சிக்காரர் இன்று அமைச்சர்கள் சபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதால் சாட்சியமளிப்பதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி சாட்சியமளிக்க மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

2010ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் விளம்பர நடவடிக்கைகளில் தனியார் நிறுவனமொன்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் அரசாங்கத்திற்கு 64 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகக் கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »