இலங்கை சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய சில நிமிடங்களுக்கு முன்னர் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்
இவர் நாட்டின் 16வது பிரதமரும் மூன்றாவது பெண் பிரதமரும் ஆவார்.
இது தவிர பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுன ஆராச்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.