திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.கணேஷ்
ராஜாவின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நீதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு சேவை இடைநிறுத்தல் கடிதம் நீதி ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்று (12) திருகோணமலை மாவட்ட ஆட்சியருக்கு பெக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட மாவட்ட நீதிபதியிடம் கேட்டறிந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மாவட்ட நீதிபதியின் பணியை பார்ப்பதற்காக திருகோணமலை தலைமை நீதிபதி இ.பயாஸ் ரசாக்கை நேற்று முதல் தற்காலிகமாக நியமிக்க நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.