Our Feeds


Thursday, October 3, 2024

Admin

தவறான முடிவுகளால் ஐக்கிய மக்கள் சக்தி தோற்றது உண்மை!


கடந்த ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த சில தவறான தீர்மானங்களே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினை விட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பு பலம் வாய்ந்தது எனத் தெரிவித்திருந்தார்.

“.. இப்போதுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு 50% வாக்குகள் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டிருந்தால் இன்று அநுர குமார திசாநாயக்க இந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்க மாட்டார்.

மேலும், ஜேவிபி ஆனது தேசிய மக்கள் சக்தியாக மாறியது. சிவப்பு இளஞ்சிவப்பாகியது. சின்னமாக இருந்த மணியை திசைகாட்டியாக்கி, மக்கள் செல்வாக்குள்ள நபர்களை மக்கள் மத்தியில் இறக்கி ஒரு அரசியல் பிரச்சாரத்தினை முன்னெடுத்து சென்றனர். அது எங்கள் பக்கத்தில் இருக்கவில்லை. எம்முடன் இருந்த சிலரை மக்களுக்கு பிடிக்கவில்லை அதுவும் உண்மை, அவர்களை மக்கள் விமர்சித்தனர்..”

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதே தமது குழுவின் திட்டமாகும் என அவர் இங்கு தெரிவித்தார்.

நேற்றிரவு தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »