இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவரது விஜயத்தில் பல உயர்மட்ட கலந்துரையாடல்கள் இருக்குமென்று தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது வெளிவிவகார அமைச்சர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.