உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு டிங் லிரென் கடுமையான போட்டி நிலவி வந்தது. 13ஆவது சுற்று வரை இருவரும் சமபுள்ளிகள் இருந்ததால் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று நடந்த 14ஆவது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58ஆவது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தினார்.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாமபியன்ஷிப் பட்டம் வெல்லும் இராண்டவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.