இந்திய வரவு -செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்)
இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்திய மத்திய அரசாங்கத்தால் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சனிக்கிழமை (01) சமர்ப்பிக்கப்பட்டது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த வரவு- செலவு திட்டத்தை சமர்ப்பித்தார்.
இதில் இந்திய வெளியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கைக்கு இந்தியாவின் வரவு- செலவு திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு சுமார் 1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.