காலி, கின்தொட்டையில் அமைந்துள்ள அல்-பயான் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் கடந்த 22.02.2025 சனிக்கிழமை வரகாபொல New Fox Hill Resort இல் சிறப்பாக நடைபெற்றது. - அல்ஹம்து லில்லாஹ்.
அரபுக் கல்லூரியின் ஆரம்ப மாணவர்கள் - உலமாக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை கம்பஹா மாவட்ட அல்-பயான் மாணவர்கள் குழாம் வழிநடத்தியது.
கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டமை சிறப்புக்குறியதாகும்.
அனைத்து மாணவர்களினாலும் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
தலைவர்: அல்-ஹாபிழ், மௌலவி RIMZAN (BAYANI)
உப தலைவர்: அல்-ஹாபிழ், மௌலவி MHM. FAZIL (BAYANI, AZHARI)
செயலாளர்: அல்-ஹாபிழ், மௌலவி AK. MUHAMMAD (BAYANI)
உப செயலாளர்: மௌலவி ARM. RIFAS (BAYANI)
பொருளாளர்: அல்-ஹாபிழ், மௌலவி MYM. FAHEEM (BAYANI)
உதவிப் பொருளாளர்: மௌலவி MAM. AMEER (BAYANI)
மேலும் ஆலோசகர்களாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இருவர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஏனைய அனைத்து மாணவர்களும் அங்கத்தவர்களாக முன் மொழியப்பட்டனர்.
அன்பும், பாசமும் பகிர அழகிய தருனமாக மாறிய அல்-பயானின் மாணவர் ஒன்று கூடல் அனைத்து மாணவர்களின் உள்ளத்திலும் ஈர்ப்பையும் பாசத்தையும் விதைத்தது என்றால் மிகையல்ல.
சமூகத்திற்காய் வாழ்வோம், சகோதரர்களாய் செயலாற்றுவோம்.