நீர்கொழும்பு, போருத்தொட்ட சமூக சேவை அமைப்பு - PCSO நடத்திய போருத்தொட்ட கல்வியலாளர்கள் மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 23.02.2025 அன்று அல்-பலாஹ் கல்லூரி பிரதான வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில், அரச துறை சார்ந்தவர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக சமூக செயல்பாட்டாளர் சகோதரர் ரஸ்மின் MISc அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஓர் ஊரின் பொக்கிஷங்களாக மதிக்கப்படும் கல்வியலாளர்கள் மற்றும் சாதனையாளர்களை கௌரவித்து, ஊக்குவிப்பதின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கான ஆர்வத்தை அதிகரிக்க செய்வதும், கல்விக்காக ஊக்குவிப்பை வழங்குவதும் தான் PCSO வின் பிரதான நோக்கம் என்ற வகையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது அல்ஹம்து லில்லாஹ்.