நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாடு காரணமாக பல உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக சுமார் 450,000 பேர் தொழிலை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் தேங்காய்கள் கணிசமான பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இது உள்நாட்டு தேங்காய் எண்ணெய்யின் உற்பத்திக்கு ஒரு தடையாக மாறியுள்ளது.
இதற்கிடையில், தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படும் மரக்கறி எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை
ஆனால், உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 15% வரி செலுத்த வேண்டியிருப்பது நியாயமற்றது எனத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகளை நடத்துவோருக்கு இடையூறாகவும் பல தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும் இதுவே காரணம் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Saturday, March 8, 2025
தேங்காய் தட்டுப்பாடு காரணமாக 450,000 பேர் வேலையின்றி நிர்க்கதியில்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »