பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கெஹெல்பத்தர பத்மே”என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கட்டுநாயக்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற கரன்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பன்னல - எலபலடகம பிரதேசத்தில் உள்ள சிறிய கால்வாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Monday, March 10, 2025
“கெஹெல்பத்தர பத்மே”வுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் கைது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »