Our Feeds


Wednesday, April 9, 2025

Sri Lanka

பிள்ளையான் திடீர் கைதுக்கான காரணம் வெளியானது



கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்பட்டு காணாமல் போன சம்பம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பில் இருந்து வருகை தந்த கொழும்பு  குற்ற விசாரணைப் பிரிவு (சி​​ஐடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து  செவ்வாய்க்கிழமை (08) இரவு கைது செய்துள்ளனர்.

 

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், கடந்த 2006 டிசம்பர் 15ம் திகதி  கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர்   கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்


இந்த சம்பவம் தொடர்பாக சி​ஐடி யினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.


கனகராசா சரவணன்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »