கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 19 பேர் காயமடைந்ததாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஆறு பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பரவி வரும் காட்சிகள் சம்பவ இடத்திலிருந்து அடர்த்தியான கரும் புகை எழுவதைக் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு 200க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரசாயன தொழிற்சாலையின் வலைத்தளத்தின்படி, இது பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் மற்றும் இரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.