புதிய பாப்பரசராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல் ஞாயிற்று கிழமையான இன்று பாப்பரசர் லியோ பொதுமக்கள் முன் தோன்றி உரையாற்றினார். இதில், உலகம் முழுவதும் உள்ள அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அவர் உரையாற்றும் போதே உக்ரைன் மற்றும் காஸாவில் அமைதி ஏற்பட வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார். உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.
மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் கூறிய விடயங்களை எதிரொலிக்கும் வகையில் அவர் பேசும்போது, உலக நாடுகளின் மோதல்களை கடுமையாக சாடினார். 3-ம் உலக போருக்கு ஈடாக நாடுகள் மோதி கொள்ளும் சம்பவங்களை கடிந்து கொண்டார்.
இதேபோன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பாப்பரசர் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார். பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கையையும் வெளியிட்டார். உலகில், அமைதிக்கும் அற்புதம் ஏற்படுவதற்கும் கடவுள் ஆசி வழங்கும்படி வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.