2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு அவசர முடிவும் எடுக்கப்படவில்லை.
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் '2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம் 12ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் இதுவரையிலும் எடுக்கவில்லை என்றும், அது குறித்து எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஊடகங்களினூடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, June 16, 2025
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »