இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று
ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5:20 மணியளவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே, கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக தெளிவற்ற நிலையில் கௌரிகுண்ட் காட்டு பகுதியில் விழுந்து விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாண்ட் மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.