உள்ளூராட்சித் தேர்தலில், மேல் மாகாணத்தில்,
கொழும்பு ,களுத்தரை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கடந்த , வியாழக்கிழமை(12) , கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.இந்நிகழ்வில் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சபீக் ரஜாப்தீன் ,எம். எஸ் .எம் .அஸ்லம், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான அர்ஷாத் நிசாம்தீன், உயர்பீட உறுப்பினர்கள் மற்று. முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.