ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய
ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.கொழும்பு கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்சியை பலரும் பார்வையிட்டுள்ளனர்.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருந்து A330-200 wide-body என்ற ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது.
புதிய ஏர்பஸ் விமானம்!
குறித்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு கடற்கரையோரமாக மிகவும் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம்
அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி - பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது.
எனினும் பலரும் எதிர்பார்த்தளவுக்கு பாரியளவிலான விமானத்தை பார்வையிட முடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.