Our Feeds


Monday, June 2, 2025

SHAHNI RAMEES

லிந்துல நகரசபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது!

 

தலவாக்கலை - லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நகர சபைக்கு சொந்தமான 12ஆம் இலக்க இறைச்சிக் கடையை குத்தகைக்கு வழங்கும் ஏலத்தின் போது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஏலச் சட்டத்தின் போது அதிக விலைக்கு ஏலம் கேட்டவருக்குப் பதிலாக, குறைந்த விலைக்கு ஏலம் கேட்டவருக்கு சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடையை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைவாக முன்னாள் நகர சபை தலைவர் இன்று (02) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »