Our Feeds


Monday, June 2, 2025

SHAHNI RAMEES

இலங்கையில் Starlink சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரெடி!

 


இலங்கையில் Starlink சேவைகளை ஆரம்பிப்பதற்கு

அரசாங்கம் தேவையான அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 


Starlink இலிருந்து பெறப்படவுள்ள தகவல் கட்டுப்பாட்டு பலகை (Dashboard) கிடைத்தவுடன், எவ்வித தாமதமும் இன்றி சேவைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். 


2025 ஆசிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டுடன் இணைந்து சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இருதரப்பு சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டார். 


இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கை ஒருங்கிணைப்பாளரான தூதர் ஸ்டெஃபன் லாங் ஆகியோர் கலந்துகொண்டனர். 


கூகுள் மற்றும் மெட்டா போன்ற முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான தொடர்ச்சியான ஆதரவு, நாட்டில் தரவு மையங்களை நிறுவுதல், AI அடிப்படையிலான தரவு மையங்களை உருவாக்குதல், சைபர் பாதுகாப்புச் சட்டத்தின் மேம்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை வலுப்படுத்துதல், தற்போதுள்ள ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் தரவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல மூலோபாயப் பகுதிகள் விவாதிக்கப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »