கடைசி அடியும் நாங்கதான் அடிப்போம். அதன்
பின் சமாதானம் பேசுவோம் - மத்தியஸ்தர்கள் குழுவுக்கு ஈரான் அதிரடி பதில்.சண்டையை ஆரம்பித்தது இஸ்ரேல், முடித்து வைப்பது நாங்களாக இருப்போம். இஸ்ரேல் எங்கள் மீது இறுதித் தாக்குதல் என்றொன்றை நடத்தினால் அதற்கும் பதிலடி கொடுத்த பின்னர் தான் சமாதான பேச்சுக்கு வருவோம். அதுவரை தாக்குதல் தொடரும் என மத்தியஸ்தர்களிடம் ஈரான் அறிவித்துள்ளது.
ஓமான் தலைமையிலான மத்தியஸ்தர்கள் குழு அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பேச்சு நடத்த வருமாறு ஈரானுக்கு விடுத்த அழைப்புக்கு மத்தியஸ்தர்கள் குழுவுக்கு மேற்கண்ட பதிலை வழங்கியிருக்கிறது ஈரான்.