அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவுடன் வவுனியா மாநகர சபை முதல்வராக காண்டீபன், பிரதி முதல்வராக கார்த்தீபன் தெரிவு!
வவுனியா மாநகர சபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (16) காலை நடைபெற்றது.
இதன்போது, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் தெரிவுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராகவும், ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு 11 ஆசனங்கள் தேவையான நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தமிழ்கட்சிகளினால் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, தமிழரசுக்கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன கூட்டாக ஆட்சி அமைக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Monday, June 16, 2025
வவுனியா மாநகர சபை முதல்வராக காண்டீபன் தெரிவு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »