காஸாவில் உணவு விநியோகம் என்ற பெயரில்
அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களை நோக்கி உணவு தேடி வந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட விமானத் தாக்குதல்கள் மேற்கொள்கின்றன...
மே 27 முதல் காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களை நோக்கி வரும் மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதோடு 340 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் ஐந்து பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர், இதனால் பலி எண்ணிக்கை 54,418 ஆக உயர்ந்துள்ளது.