உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைப்பதற்கு மாத்திரம் தான் எதிர்க்கட்சிகளுடன் பொதுவான கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம். இது தற்காலிக கூட்டிணைவே தவிர நிரந்தரமான கூட்டிணைவல்ல என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றங்களில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் இரண்டு உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரங்களை கைப்பற்றியுள்ளோம். அதேபோல் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு கொள்கை அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஆணை வழங்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு கணிசமான அளவு ஆணை வழங்கியுள்ளார்கள். கிராமத்தின் அதிகாரம் எதிர்க்கட்சிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைப்பதற்கு மாத்திரம் தான் எதிர்க்கட்சிகளுடன் பொதுவான கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம்.இது தற்காலிக கூட்டிணைவே தவிர நிரந்தரமான கூட்டிணைவல்ல என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகளில் ஒருசில குறைப்பாடுகள் காணப்படுகின்றன.மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடைய இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் நிலையான வகையில் கூட்டிணைய முடியாது என்றார்.