இலத்திரனியல் வருமான உரிமம் வழங்கும் அமைப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி முதல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வாகன வருமான உரிமம் வழங்கும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சேவைகள் 9 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிநுட்ப கோளாறை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சீராக்கப்பட்டவுடன் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.