சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் குருணாகல் நிக்கவரெட்டிய மானிகம வனப்பகுதியில் சுற்றித்திரிந்த “பஹட்டியா” என்ற யானை ஒன்று நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்துள்ளது.
நீர் நிரம்பிய குழியில் விழுந்த யானையை பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“பஹட்டியா” யானையின் தலை நீரில் மூழ்காமல் இருப்பதற்காக யானையின் தலையை சுற்றி மணல் மூட்டைகள் போடப்பட்டுள்ளன.
அத்துடன், “பஹட்டியா” யானையை வெயிலிருந்து பாதுகாப்பதற்காக யானையை சுற்றி துணியினால் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர் நிரம்பிய குழியில் விழுந்த “பஹட்டியா” யானைக்கு இராணுவ வீரர்கள் உணவும் வழங்கியுள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து “பஹட்டியா” யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sunday, July 6, 2025
நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்த யானை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »