மனிதாபிமானமற்ற மற்றும் துயரமான மோதலுக்கு உள்ளான பலஸ்தீனத்தின் அப்பாவி மக்களுடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த, இலங்கைக்கான பலஸ்தீன தூதர் மாண்புமிகு இஹாப் கலீலை மரியாதை நிமித்தம் சந்தித்தேன்.
சர்வஜன அதிகாரம் பலஸ்தீனத்துடன் உறுதியாக நிற்கிறது, மேலும் சர்வதேச சட்டத்தை மதித்து, இந்த கொடூரமான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும் பலஸ்தீன மக்களின் பட்டினியை முடிவுக்குக் கொண்டுவரவும் இஸ்ரேலை வலியுறுத்துகிறது
நமது பௌத்த நாகரிகக் கொள்கைகள் எப்போதும் உலகத்தை அமைதியுடன் ஒன்றிணைய அழைப்பு விடுத்துள்ளன. மேலும் இந்த முக்கியமான நேரத்தில், மனிதகுலத்திற்காக உலகத் தலைவர்கள் ஒன்றுபட ஊக்குவிப்பது நமது கடமையாகும்.
