Our Feeds


Monday, August 11, 2025

SHAHNI RAMEES

காசாவில் இஸ்ரேல் அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள் ஐவரை கொலை! - சஜித் கடும் கண்டனம்

 


காசாவில் இஸ்ரேல் அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள்

ஐவரை கொலை செய்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது உண்மை மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது


பத்திரிகையாளர்களை வேண்டுமென்றே கொலை செய்வது உண்மைமீதான தாக்குதலாகும்.



செய்தி அறிக்கையிடலிற்காக தங்களின் உயிர்களை பணயம்வைத்து போர்முன்னரங்கில் செயற்படுபவர்களை மௌனமாக்குவது மனித குலத்திற்கு எதிரான ஊடக சுதந்திரத்திற்கு எதிரான குற்றம்.



ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் அதற்கு ஆதரவளிக்கும் அனைத்து ஜனநாயக நாடுகளும் இந்த கொலைக்கு பொறுப்புக்கூறலை கூறவேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »