ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என அந்நிறுவனத்தின் பிரதான இயக்குனர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4100 ஆகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,645 ஆகவும் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்றும் லிட்ரோ கூறுகிறது. அதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
