பொலனறுவை - பராக்கிரம சமுத்திரத்தில் படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், 72 வயதான தந்தையும் அவரது 38 வயதுடைய மகனுமே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அதேநேரம், படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய மேலும் எட்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
