Our Feeds


Friday, October 24, 2025

Sri Lanka

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம்!


2024/25 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, 2023/24 ஆம் நிதியாண்டில்  7,925 மில்லியன் ரூபா  இலாபத்தை ஈட்டியுள்ளது.

அதன்படி, 2023/24 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2024/25 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி இலாபம் குறைந்ததே இதற்கு காரணம் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2023/24 ஆம் ஆண்டில் 26,717 மில்லியன்  ரூபாவாக இருந்த அந்நியச் செலாவணி இலாபம்  2024/25 ஆம் ஆண்டில்  3,925 மில்லியன் ரூபாவாக குறைவடைந்தது. 

டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது அந்நியச் செலாவணி இலாபம் குறைவடைகிறது. இதனால் இலாபம்  நஷ்டமாக மாறுகிறது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »