Our Feeds


Friday, October 24, 2025

Sri Lanka

38ஆவது நாளாக கனமழையிலும் தொடரும் முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம்



திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் கனமழையிலும் இன்று (24) 38ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம், சூரியமின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதையடுத்து, அதனை மீள பெற்றுத்தரக்கோரி சத்தியாக் கிரகப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இதுதொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்,

மழை காலங்களில் நனைந்து போராடுவதை நடப்பு கால அரசாங்கம் ரசிக்கிறதா? எங்களுக்கான தீர்வை இப்படி தான் தருவோம் என்பதை எழுத்து மூலமாக அறிவித்தால் என்ன. இதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவ்வளவு அதிகாரிகளுக்குள்ளும் சொல்லப்படும் விடயங்கள் சாத்தியமில்லை.அரசாங்கத்தை நம்பியே இங்கு மழையில் நனைந்து தீர்வு கேட்கிறோம். 

எமது கஷ்டத்தை உணருங்கள் ஜனாதிபதி கூறுகிறார்"ஓடும் ரயிலில் அதே நிலையில் கைக்குழந்தையுடன் பெற்றோர்கள் வறுமையில் வாடுகின்றனர். அரசியலுக்காக அல்ல விவசாய பட்டியலை உரிய திணைக்களத்தில் பெற்று தீர்வினை பெற்றுத்தருவீர்கள் என காத்திருக்கிறோம் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »