இதன்போது, ஐந்து பொதிகளில் பொதி செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
செவ்வந்தி தங்கி இருந்ததாக கூறப்படும், கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியிலேயே, கொழும்பிலிருந்து சென்றிருந்த காவல்துறை குழுவினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளுடன், சந்தேகநபர் கொழும்பு காவல்துறை குழுவினரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒருவருக்கும் மாத்திரம் உயர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 6 பேரும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சந்தேகநபர்களிமிருந்து, பெருமளவிலான போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
